madawalanews

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

தலையில் கொம்பு முளைத்த விசித்திர மனிதர்கள் (அதிர்ச்சி படங்களுடன்)



இன்றைய விசித்திர மனிதர்கள் பகுதியில் நீங்கள் பார்த்து வியக்க இருப்பது உலகில் கொம்புடன் வாழ்ந்தவர்களை பற்றிய செய்தி தொகுப்பு.. கொம்பு முளைத்தவர் பற்றிய செய்திகளை நீங்கள் இதற்கு முன்னரும் படித்திருக்க கூடும். இவ்வாறான கொம்பு முளைத்த மனிதர் ஒன்று அல்லது இரண்டு என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்காவே இந்த செய்தி. உலகில் இவ்வாறான தோற்றம் பலருக்கு இருந்திருக்கிறது என்பதை நீங்கள் இச்செய்தியின் மூலம் அறிந்து கொள்ளமுடியும். இவர்கள் ஒவ்வொருவர் பற்றிய தகவல்கள்அவரவர் புகைப்படங்களுக்கு கீழே வழங்கப்படுகிறது.
People With Horn
இன்றைய விசித்திர மனிதர்கள் பகுதியில் நீங்கள் பார்த்து வியக்க இருப்பது உலகில் கொம்புடன் வாழ்ந்தவர்களை பற்றிய செய்தி தொகுப்பு.. கொம்பு முளைத்தவர் பற்றிய செய்திகளை நீங்கள் இதற்கு முன்னரும் படித்திருக்க கூடும். இவ்வாறான கொம்பு முளைத்த மனிதர் ஒன்று அல்லது இரண்டு என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்காவே இந்த செய்தி. உலகில் இவ்வாறான தோற்றம் பலருக்கு இருந்திருக்கிறது என்பதை நீங்கள் இச்செய்தியின் மூலம் அறிந்து கொள்ளமுடியும்.

கொம்பு முளைத்த மனிதர்கள்-1
Zheng-Zhou-horn
மேலே காட்டப்பட்டுள்ள நபர்  சீனாவின் Zheng Zhou பிரதேசத்தில்  வாழ்ந்த 88 (2006 இல்)வயதான வயோதிபர் ஆவார். இவருக்கு தனது தலையின் வலது பக்கத்தில் கொம்பு போன்று முளைத்துள்ளது. இதுபற்றி தெரிவித்த இவர் தனக்கு தலையில் மோதுண்ட பின்னரே இவ்வாறு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
கொம்பு முளைத்த மனிதர்கள்-2
Ma-Zhong-Nan ,கொம்பு முளைத்த மனிதர்கள்
இரண்டாவது படத்தில் காட்டப்பட்டுள்ள இந்த  மூதாட்டி சீனாவின் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த 93 வயது  (2007 இல்)  நிரம்பியவராவார். இவருக்கு 5 வருடங்களாக தலையில் இவ்வாறான கொம்பு போன்ற அமைப்பு வளர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 10 செ.மீ வரை இந்த கொம்பு வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். Ma Zhong Nan என அழைக்கப்படும் இவர் ஒரு முறை தலை சீவும் போது தவறுதலாக விழுந்த கீறலின் காரணமாவே இவ்வாறு ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
கொம்பு முளைத்த மனிதர்கள் – 3
Cranny-Zhao , கொம்பு முளைத்த மனிதர்கள்

கடந்த 2007 ம் ஆண்டு வெளிவந்த ஒரு பத்திரிகை செய்தியின் அடிப்படையில் மேற்காட்டப்பட்டள்ள படத்தில் இருப்பவர் சீனாவைச்சேர்ந்த 95 வயது Granny Zhao (2007 ல்) நிரம்பிய பாட்டி. இவருக்கு நெற்றியில் கொம்பு முளைத்துள்ளது. ஒரு பூசணிப்பிஞ்சு உருவில் இவருக்கு முளைத்துள்ள நெற்றிக்கொம்பு தனக்கு எந்தவித வலியினையும் தோற்றுவிப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார் இப்பெண். தேங்காய் ஓடு போன்று மேற்பரப்புடன் இக்கொம்பு காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.
கொம்பு முளைத்த மனிதர்கள் – 4
கொம்பு முளைத்த மனிதர்கள்

Saleh Talib Saleh என்றழைக்கப்படும் இந்நபர் கொம்பு முளைத்த மனிதர்களில் கொஞ்சம் வித்தியாசமானர் என்றுதான் கூறவேண்டும். தனக்கு எவ்வாறு இந்நிலமை ஏற்பட்டது என்பதை இவர் தெரியாது என டாக்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடமும் மறுத்து வந்துள்ளார். இவருக்கு 78 வயதாக இருக்கும் போது இவ்வாறு ஏற்பட்டதாக தெரியவருகிறது. 2007 இல் இவருக்கு 102 வயதாக இருக்கின்ற பொழுதும் வைத்தியர்கள் தலையில் காணப்படும் கொம்பை அகற்ற முயற்சிகள் மேற்கொண்ட போது தன்னால் இதை அகற்ற முடியாது எனவும் இது எனக்கு அல்லாஹ் கொடுத்த கொடை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொம்பு முளைத்த மனிதர்கள் – 5
கொம்பு முளைத்த மனிதர்கள்

அப்துல் ரசாக் எனப்படும் இந்த வயோதிபர் ஒரு ஓய்வு பெற்ற பொலீஸ்ரீ அதிகாரியாவார். இந்தியாவின் நரசிங்காபுர நகரைச்சேர்ந்த இவருக்கு தனது தலையின் பின்புறத்தில் கிளைவிட்ட கொம்புகள் முளைத்துள்ளது. இவர் தனது வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவருக்கு இந்நிலமை ஏற்பட்டுள்ளது. 20 வருடங்களாக இருக்கும் இந்த கொம்புகள் ஐந்து கிளைகளாக பிரிந்து வளர்ந்துள்ளது விசித்திரமாக உள்ளது. கடந்த 2008 இல் இவரது கொம்புகள் கைவிரல் நீளத்துக்கு வளர்ந்து இவருக்கு வலியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கொம்பு முளைத்த மனிதர்கள் – 6
கொம்பு முளைத்த மனிதர்கள்

சீனாவின்  Linlou கிராமத்தில் வசிக்கும் Zhang Ruifang  எனும் 101 வயதான இந்த மூதாட்டிக்கு நெற்றியில் கொம்பு முளைத்துள்ளது. இக்கொம்பு ஆட்டில் கொம்பு போன்று காணப்படுகிறது. இது 6 செ:மீ வரை வளர்ந்துள்ளது. இவருக்கு முளைத்த இக்கொம்பினை டாக்டர்கள் அகற்றிய போதும் இவரின் நெற்றியின் மறுபக்கத்தில் இன்னுமொரு கொம்பு முளைப்பதற்கான கறுப்பு அடையாளம் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கொம்பு முளைத்த மனிதர்கள் – 7
கொம்பு முளைத்த மனிதர்கள்

69 வயதான இப்பெண்மணிக்கு தனது உச்சந்தலையில் கொம்பு காணப்படுகிறது. தனக்கு பல வருடங்களுக்கு முன்னர் உச்சந்தலையில் அடிபட்டதன் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளதாக கடந்த 2008 இல் டாக்டர்களிடத்தில் இவர் தெரிவித்திருந்தார். இவருக்கு வளர்ந்துள்ள இக்கொம்பு சுமார் 20 செ.மீற்றர்கள் சுருண்டு வளர்ந்து இவரது நெற்றி மறையுமாறு காணப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இவரது கொம்புகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகில் இவர்கள் மட்டும்தான் இவ்வாறு தலையில், நெற்றியில் கொம்புகளுடன் வாழ்ந்தவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..? இல்லை இவர்களை போன்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலர் இருக்கின்றார்கள் அவர்களை பற்றிய விறுவிறுப்பான செய்திகளை தொடர்ந்தும் எதிர்பாருங்கள்…

puthiyaulakam thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக